உள்ளாடையில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி கேலி செய்த ஜவுளிக்கடை உரிமையாளர் கைது..!

ள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வழங்கப்படும் நிவாரண பொருட்களில், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டுவதால் காலதாமதம் ஏற்படுகிறது என்று புகார்கள் எழுந்துள்ளன. 

தன்னார்வலர்கள் கொடுக்கும் நிவாரண பொருட்களிலும் ஜெயலலிதா போட்டோவை ஒட்டுவதற்கு அதிமுகவினர் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தகராறு செய்வோர் பற்றி தகவல் கொடுத்த அதிமுக தலைமை கழகம், போன் எண்களை வெளியிட்டுள்ளது. 

இந் நிலையில் டெக்ஸ்டைல் உரிமையாளர் ஒருவர், உள்ளாடையொன்றில், முதல்வர் படத்தை ஒட்டி வைத்தது போன்ற படத்தை சமூக தளங்களில் வெளியிட்டார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு சென்றது. எனவே  டெக்ஸ்டைல் உரிமையாளரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -