முரளிதரனை ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவராக நியமித்தமை சரியான தீர்மானம் - ஜனாதிபதி

விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராகவும் பிரதியமைச்சராகவும் நியமித்தமை சரியான தீர்மானம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மனதில் இனவாதத்தை புகுத்துவது மிகவும் ஆபத்தானது. அரசியல் கைதிகளை விடுதலை செய்தமை தொடர்பாக சில சக்திகள் அரசு மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களது உள்ளங்களில் இனவாதத்தை விதைகின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் போது தடுத்து வைக்கப்பட்டவர்கள் 12,000 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் எவ்வாறு அரசின் மீது விரல் நீட்ட முடியும், என கேள்வி எழுப்பினார்.

தயவு செய்து வாக்குகளை பெறுவதற்காக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பவற்றை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -