ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் எம்.ஐ.சஹாப்தீன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா..!

நிஸ்மி-
38வருடகால கல்விச் சேவையிலிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஐ.சஹாப்தீன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா (02) புதன்கிமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதாஉல்லா அரங்கில் இடம் பெற்றது.

அதிபர் எம்.எம்.மீராசாஹிப் தலைமையில் இடம் பெற்ற இச் சேவை நலன் பாராடடு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் அவர்கள் கலந்து கொண்டதோடு, விஷேட அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம், கௌரவ அதிதிகளாக மாவட்ட நீதிபதி பயாஸ் றஸ்ஸாக், ஒய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எஸ்.அஹமட் கியாஸ், ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி;, கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.இக்பால் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.அபுல் ஹஸன், கே.எம்.நஜுமுதீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹனிபா இஸ்மாயில், முன்னாள் அதிபர்களான அதிபர் திலகம் எம்.ஏ.உதுமா லெவ்வை, ஏ.அப்துல் அஸீஸ், சிறப்பு அதிதிகளாக பாடசாலை அபிவி த்திக் குழு செயலாளர் ஒய்வு பெற்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜி.அப்துல் கபூர், உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், விவசாயப் பிரதிப் பணிப்பாளர்வை.பி.இக்பால், அல்-ஹாஜ் எம்.எச்.முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டதோடு கல்லூரி பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வர்த்தக பட்டதாரி ஆசிரியராகக் கடமையை ஆரம்பித்த அதிபர் சஹாப்தீன் அவர்கள் அதிபராக, கோட்டக்கல்வி அதிகாரியாகக் கடமையாற்றி இறுதியாக அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்றார்.

கல்லூரியின்முகாமைத்துவ சபை, ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கம், கல்விசாரா ஊழியர்கள், உயர்தரம், ஆங்கிலமொழிபிரிவு, தரம் 11,10.9,8,7,6 வலயததலைவர்கள், தமிழ் பாடஆசியர்கள் குழ, பழையமாணவர் பொறியியலாளர் வை.பி.சமட் ,அதிபர் எம்.பி.செயினுல் ஆப்தீன், ஆசிரியர் ஏ.ஜி.எம்.இஸ்ஹாக் என்பவர்களால் ஓய்வுபெற்ற அதிபரைப்பாராட்டி பாராட்டுபத்திரம் வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டதுடன் அனைவராலும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

சேவையை பாராட்டி பாடசாலை சமுகத்தினால் தடம் பதித்ததடயங்கள் சேவைநலன் பாராட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டதுடன் குறிப்பாக பொற்கிளியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -