இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்கள் எதற்கும் அறிவிக்காமல் பாகிஸ்தான் லாஹுர் நகருக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபுர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் இந்தியா வரும் வழியில் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
ரஷ்யாவின் தலைநகரிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகருக்கும் விஜயம் செய்துள்ள பிரதமர் மோடி, அந்நாட்டிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியொன்றையும் திறந்து வைத்துள்ளார்.
ஆப்கானிலிருந்து இந்தியா வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தும், திடீரென ஆப்கானிலிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு பிரதமர் நவாஸ் ஷெரீபையும் சந்தித்துள்ளார். நாவஸ் ஷெரீபின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கவே இந்தியப் பிரதமர் அங்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்திய தலைவர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் டெல்லி நோக்கி புரப்பட்டார்..
