பாடசாலை சேவை பஸ் ஒன்றிலிருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்.!

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம அட்டன் பிரதான வீதியில் போடைஸ் வழியாக செல்லும் பாடசாலை சேவை பஸ் ஒன்றிலிருந்து தவறி விழுந்த ஸ்டெலா என்ற 55 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்மணி 30.11.2015 அன்று போடைஸ் சந்தியில் பஸ்ஸில் ஏறி உள்ளே நுழையும் பொழுது ஓட்டுனரால் பஸ் முன்னோக்கி செல்ல முயற்சித்த வேளையில் இப்பெண்மணி தவறி விழுந்ததாக சம்பவ இடத்தில் காணப்படும் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த (சீ.சீ.டீ.வீ) கண்காணிப்பு கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை அயலவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -