பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. பெட்ரோல் விலை லீட்டருக்கு 58 காசுகளும், டீசலின் விலை லீட்டருக்கு 25 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. 

இதற்கு முன்பாக கடந்த 16-ந்தேதி பெட்ரோலின் விலை லீட்டருக்கு 36 காசுகள் உயர்த்தப்பட்டிருந்தது. அதேபோல், அக்டோபர் மாதம் முதல் 3 முறை டீசலின் விலை 87 காசுகள் உயர்த்தப்பட்டிருந்தது. 

இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே வரும் மாதங்களில் பெட்ரோல், டீசலின் விலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -