பம்பலபிடியில் ரயிலில் மோதி இருவர் பலி..!

ம்பலப்பிடி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

இதேவேளை, கொழும்பில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த ரயிலில் மோதி மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். 

பம்பலப்பிடி பகுதியிலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. 

மேலும் இதன்போது நாவல - ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 72 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -