க.கிஷாந்தன்-
நானுஓயா எடின்புரோ தோட்டத்தில் 300 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 14.12.2015 அன்று காலை 08 மணிமுதல் 10 மணி வரை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தில் இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலை கடந்த 03 மாதங்களுக்கு முன்பு தோட்ட நிர்வாகத்தால் இயந்திரங்களை திருத்துவதாக கூறி தற்காலிகமாக தொழிற்சாலை மூடபடும் என தொழிலாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
ஆனால் 03 மாதங்கள் கடந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கபடவில்லை எனவும் தற்போது தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கேட்டபோது அதற்கு பணம் இல்லையென தெரிவிப்பதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் நல்ல வருமாணத்தினை தர கூடிய தேயிலை மலைகள் தோட்ட நிர்வாகத்தால் முறையாக பராமரிக்கபடாமல் கைவிட்டுள்ளதாகவும் இத்தேயிலை மலைகளை துப்பறவு செய்வதற்கு கம்பனியிடம் பணம் இல்லை இதன் காரனமாகவே துப்பறவு செய்யமுடியாத நிலை இருப்பதாக தோட்ட நிர்வாகம் தெரிவிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்கபடுவதில்லை தோட்டத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதார விடயங்களை முறையாக செய்து கொடுப்பதில்லையென தெரிவித்தே இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலையை உடனடியாக திறக்கபடாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பதாக இவர்கள் கோஷங்கள் மூலம் தெரிவித்தனர். இவ் ஆர்பாட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.


