சவூதி அரேபியா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து..!

வூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மேலும் 107 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜிசான் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தானது மருத்துவமனையில் முதல் மாடியில் ஏற்பட்டுள்ளது. 

அந்த மாடியில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தை நல பிரிவுகள் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -