அடுத்த வருடத்திற்கான மாகாண சபைகளுக்கான நிதி, நிதியமைச்சினால் ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தீர்மானித்துள்ளார்.
மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையே இன்று கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்பின்னர், எமது செய்தி பிரிவிற்கு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக செயற்படவுள்ளதாக கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து முதலமைச்சர்களும் தெரிவித்ததாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் குறிப்பிட்டார்.
