சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்டப் பதிவாளராக கடமையாற்றிவரும் செயினுலாப்தீன் நஸீர்தீன் அவர்கள் எதிர்வரும் 2016.01.01ம் திகதி முதல் கல்முனை காணி மாவட்டப் பதிவகத்திற்கு காணிப்பதிவாளராக பதிவாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றுச் செல்கிறார்.
மும்மொழியிலும் சிறந்த தேர்ச்சி அடைந்துள்ள இஸட் நஸீர்தீன் அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்வில் சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை மேலதிக மாவட்டப் பதிவாளராக கடமையாற்றிவரும் இவர் காணிப்பதிவகத்திற்கு பதிவாளராக நியமிக்கப்பட்டமையானது இப்பகுதியில் காணப்படும் மக்களின் காணிப்பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை.
