நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைகழக கல்லூரி ஆரம்பிக்கப்படும்..!

க.கிஷாந்தன்-
தேசிய கல்வி நிறுவகத்தினூடாக புதிய கல்வி கொள்கை சீர்திருத்தத்தை விரித்திக்க மலையகத்தில் இதனை நடைமுறைப்படுத்த ஆராய்யும் குழு ஒன்று 30.11.2015 அன்று கொட்டகலை பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டது.

இதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் குணபால நாணயக்கார, தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் உட்பட பலரும் விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன்போது கொட்டகலை கல்வி கலாசாலை மற்றும் தோட்டப்பகுதி பாடசாலைகள் பார்வையிடப்பட்டத்துடன் அங்கு இடம்பெறும் குறைபாடுகள் தொடர்பாக கண்டறியப்பட்டதோடு இங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்க உட்கட்டமைப்பு வசதிகளை தேசிய கல்வி நிறுவகத்தின் சிபாரிசுக்கு அமைய அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில்…

மலையக கல்வி வளர்ச்சிக்கு இன்னுமொரு அமைச்சின் உதவி நாடப்பட்டுள்ளது. இதனூடாக நுவரெலியா மாவட்டத்தில் கல்வி விரித்திக்காக பல்கலைகழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த அரசாங்கத்தில் கிடைத்திராத பல்வேறு உதவிகள் மலையக கல்வியை ஊக்குவிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக கிடைக்கபெற்ற இந்த வாய்ப்புகளை நாம் முறையாக பாவிக்க வேண்டும் எனத்தெறிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்…

தேசிய நீரோட்டத்தில் கலக்கும் அளவிற்கு மலையக கல்வி அபிவிருத்தி முன்னேற்றம் அடைவதை இலக்காக கொண்டு நான் செயற்படுகிறேன். புதிய அரசாங்கத்தில் மலையக கல்வி வளர்ச்சிக்கு பல்வேறுப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மலையக தோட்டப்பகுதிகளில் பட்டாதாரிகளை உருவாக்கும் நோக்கத்தை உயர்வாக எண்ணி 25 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 250 மில்லியன் ரூபாவினை வரவு செலவு திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்து 2016ம் ஆண்டு கல்வி மறுமலர்ச்சிக்கு புதிய அரசாங்கம் எனது அமைச்சின் கீழ் வித்திகவுள்ளது.

9 பில்லியன் ரூபா செலவில் மலையக பாடசாலைகளில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் கட்டிடங்கள், குடிநீர் வசதி, தொழில்நுட்ப வசதி போன்றவற்றை நிர்மாணிக்கவும் இதனூடாக முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் மலையக கல்வி வளர்ச்சிக்கு என பெரும்பாலான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நடைமுறையில் உள்ள புதிய அரசாங்கத்தில் கல்வி அபிவிருத்திக்கு என மலையகத்திற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

கடந்த அரசாங்கத்தில் கிடைக்கப்பெறாத சலுகைகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை வைத்து மலையக கல்வியை விரித்திக்கும் அதேவேளை ஆசிரியர்கள், அதிபர்கள் போன்றவர்களுக்கான பயிற்சிகளும் எதிர்வரும் காலங்களில் நடாத்தப்படும். 

அதேபோன்று புலமை பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் போன்றவற்றில் பெருந்தோட்ட மாணவர்கள் முன்னிலை வகிக்கும் அளவிற்கு கல்வி மாற்றம் ஏற்படுத்த தேசிய கல்வி நிறுவகத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தார்மீக பொறுப்பாக கொண்டு அவர்கள் செயல்படுத்த வேண்டும் என இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -