அஷ்ரப் ஏ சமத்-
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு, ஊவா பிரதிப் பொது முகாமையாளராக ஐந்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய பொறியியலாளர் எம்.ஐ.ஏ லத்தீப் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டு 2015.11.16ம் திகதியிலிருந்து கடமையாற்றி வருகின்றார்.
இவர் கிழக்கு மாகாண பிரதி முகாமையாளராக கடமையாற்றுவதற்கு முன்பு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் எட்டு வருடங்களுக்கு மேலாக நீர் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார். கல்முனைக்;குடி,சாய்ந்தமருது நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் கல்முனை அல் -அஷ்ஹர், உவெஸ்லி உயர் தர பாடசாலை மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும் கல்முனைக்குடி முஹையித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவரும் பிறப்பு, இறப்பு பதிவாளருமான மர்ஹும் ஜனாப் எம்.பி.எம். இஸ்மாயில் அவர்களின் புதல்வராவார்.
