பாழடைந்த குளியலறையில் 78 வயது பாட்டியை அடைத்து வைத்த பேத்தி..!

னது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென்னிலங்கையின் காலி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளதாகவும் மீட்டியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து வயோதிபப் பெண்ணின் பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மற்றுமொரு மகளை அழைப்பை மேற்கொண்டு வரவழைத்த பொலிஸார், தாயை ஒழுங்காக பார்த்துக் கொள்ளவில்லையெனக் கூறி அவரையும் கைது செய்துள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -