இன்றுமுதல் சாலை ஒழுங்கு கடுமையாக அமுல்படுத்தப்படும் வீதிகள்..!

பௌத்தாலோக மாவத்தை, டுப்ளிகேஷன் வீதி, ஹை லெவல் வீதி மற்றும் நுகேகொடை ஆகிய வீதிகளில், இன்று திங்கட்கிழமை (07) முதல் சாலை ஒழுங்கு, கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சாரதிகள், வீதி ஒழுங்குகளைப் பின்பற்றுகின்றார்களா என்பதைக் கண்காணிக்க, பொலிஸ் அதிகாரிகளை மேலதிகமாகக் கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

குறிப்பாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர வீதியின் ஜயந்திபுரயிலிருந்து கொழும்புவரை, நவம்பர் 26ஆம் திகதி முதல் சாலைச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தது. 

கடந்த நவம்பர் மாதத்தில், சாலைச்சட்டத்தை மீறியமைக்காக, 13,095 சாரதிகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -