பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் உண்மையிலேயே வாகன விபத்தா? அல்லது கொலையா என்பது குறித்து நீதிமன்றம் தீர்ப்பு எதிர்வரும் 10ம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கை மற்றும் ஏனைய சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, அண்மையில் நீதிமன்றில் தாஜூடீன் மரணம் குறித்து வழங்கப்பட்ட அறிக்கையில் சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை படுகொலை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய அவர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
