சுகாதார அமைச்சரின் காத்தான்குடி வைத்தியசாலைக்கான விஜயம் வெற்றியளித்தது..படங்கள்

எம்.எச்.எம்.அன்வர்-


காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நஸீர் விஜயம் செய்து வைத்தியசாலை குறைபாடுகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார் காத்தான்குடி மீடியா போரத்தின் அழைப்பின் பேரில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நஸீர் இன்று 06.12.2015 விஜயம் செய்து வைத்தியசாலை தொடர்பான ஆளணிப்பற்றாக்குறை வளப்பங்கீடுகள் இரத்த வங்கியின்மை வைத்தியர் பற்றாக்குறை மகப்பேற்று வைத்தியர் இன்மை உபகரணங்கள் இருந்தும் ஊழியர் இன்மை உளநலப்பிரிவு மற்றும் கட்டட சேதங்கள் தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்ததுடன் இவற்றினை நிவர்த்திசெய்து தருவதாகவும் உறுதியளித்தார்.


வைத்திய அத்தியட்கசர் டொக்டர் எம் எஸ் எம் ஜாபிர் தலைமையில் இது தொடர்பாக நிகழ்வொன்றும்


இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாளர் டொக்டர் எம்


அப்துர்ரஹ்மான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் முன்னாள் மாகாண சபை


உறுப்பினர் யூ எல் எம் .என் முபீன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம்


நிறுவனங்களின் உப தலைவர் எம்.ஜ.எம்.சுபைர் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்


எம்.அப்துல் காதர் பலாஹி வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களான டொக்டர் எம்.டி


மாஹிர் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.தௌபீக் அஷ்ஷெய்ஹ் ஏ ஜி அப்துல் கபூர் மதனி


தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம் மன்சூர் முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அகமட் லெவ்வை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாதியர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்


வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினால் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவேண்டிய திட்டங்கள்


தொடர்பான மகஜர் ஒன்றும் இங்கு கையளிக்கப்பட்டதுடன் எமது ஊரின் சொத்தான இவ்வைத்தியசாலையை


மட்டக்களப்பிற்கு அடுத்தாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து தருமாறு


அனைவரும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -