அட்டாளைச்சேனை அல்-மினா பாலர் பாடசாலையின் விடுகை விழா..!

றியாஸ் ஆதம்-றிசாத் ஏ காதர்-

ட்டாளைச்சேனை அல்-மினா பாலர் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வும், அரம்ப நிலை சிறார்களின் விடுகை விழாவும் இன்று அட்டாளைச்சேனை அக்-அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விழா அல்-மினா பாலர் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பபளர் எம்.எல்.எம். சியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாiலெப்பை கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆரம்ப நிலை சிறுவர், சிறுமிகள் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டினர்.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக வைத்தியர் எஸ்.எம்.முனாஸ்தீன், பிரபல சமூக சேவையாளர் ஏ.எம். மனாஸ்;, அக்-அந்நூர் மகா வித்தியாலய அதிபர் கிதுறு முகம்மட் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட சிறார்களின் பெற்றோர்கள் தாய்மார்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறார்களின் நிகழ்வுகளை கண்டுகழித்தனர்.
2016ஆம் வருட வருகை மாணவர்களுக்கு அதிதிகளினால் சின்னம் சூட்டப்பட்டு, கறறல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பிரபல சமூக சேவையாளர் மனாஸ்; பாலர் பாடசாலைக்காக கற்பித்தல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
மேலும் இந்த விடுகை விழா நிகழ்வுகளில் சிறார்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்ட நிகழ்வுகளை திறம்பட மேற்கொள்ள அரும்பணியாற்றிய ஆசிரியைகளை மாகாண சபை உறுப்பினர் பாராட்டி கௌரவித்து பரிசில்களும் வழங்கிவைத்ததோடு எதிர்காலத்தில் இப்பாலர்பாடசாலைக்கு தன்னாலான பங்களிப்புக்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -