உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள ஐ.எஸ் ஆயுதாரிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இலங்கையின் விமான நிலையம், துறைமுகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலினை பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் விசேட ஆய்வு குழு ஒன்றை நியமித்து, விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் ஆயுதாரிகளினால் உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இலங்கையின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஐ.எஸ் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 130 பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
