கோட்டாபாயவிடம் விசாரணை..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உரிய ஆவணத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட யானை குட்டிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நேற்று (01) நீதிமன்றில் இதனை தெரிவித்தார்.

சட்டவிரோதமாக யானை குட்டிகளை தம் வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு இரண்டு யானை குட்டிகள் வழங்கப்பட்டதாகவும் அவை தற்சமயம் அவரிடம் இல்லை என்றும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாக யானை குட்டிகளை தம் வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களையும் அவர் நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

கொலன்னாவே சுமங்கல தேரர், பிராக்மனவத்தே ரதனசார தேரர், மேலதிக நீதவான் திலின கமகே மேல் மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய உள்ளிட்ட 11 பேர் யானைகளை வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -