எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் நஜாஹ் அரபிக் கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) கல்லூரியின் மண்டபத்தில் அதிபர் ஏ.ஆர்.எம்.நஸிர் மௌலவியின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளதாக பழைய மாணவர்களின் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.என்.இர்பான் (நஜாஹி) தெரிவித்தார்.
இப் அரபிக்கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளூமாறும் கடந்த 2009ஆண்டிலிருந்து 2015ஆண்டு வரையான காலப்பகுதியில் இக்கல்லூரியிலிருந்து மார்க்க கல்வியைக் கற்று வெளியான மௌலவிகளுக்கான பட்டமளிப்பு விழாவினைப் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதோடு, எதிர்காலத்தின்
நடைமுறைப்படுத்தப்படவுள்ள விடயங்கள் பற்றியும் ஆராயப்படவுள்ளதால் இக் அரபிக்கல்லூரியிலிருந்து வெளியான அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு செயலாளர் அறிவித்துள்ளார்.
