5 மில்லியன் ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் கையளித்தல்...!

அபு_அலா–

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், சுயதொழில் கடன் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புக்களுடனான 5 மில்லியன் ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் கையளித்து வைக்கும் நிகழ்வு இன்று (25) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த சுயதொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட மிக வறிய 86 குடும்பங்களும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்கேணி, தீகவாபி, அஷ்ரப் நகர், ஆலங்குளம், சம்புநகர் போன்ற கிராமங்களில் வாழும் இக்குடும்பங்களை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களினூடாக இத்தெரிவு இடம்பெற்றது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 86 குடும்பங்களின் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் முகமாக அவர்களின் வருமானத்தை ஈட்டும் வன்னம் தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், நெற் குத்தும் இயந்திரங்கள், தச்சுத் தொழில் உபகரணங்கள், ஆழ்கடல் மீன் பிடி வலைகள், நீர் பம்பிகள், ஆப்பை விற்பனை செய்பவர்களுக்காக கேஸ் அடுப்புக்கள், ஜஸ் விற்பனை செய்பவர்களுக்காக குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சீமெந்து கல் வெட்டும் இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திவிநெகும முகாமையாளர்கள் ஏ.எம்.ஹமீட், எம்.ஜே.எம்.நிஹ்மத்துள்ளா, ஏ.சி.அன்வர், எ.எம்.எஸ்.நயிமா, யு.கே.எம்.நழீம், பி.கமலேஸ்வரன் உள்ளிட்ட திவிநெகும உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -