கல்முனை வீதி அபிவிருத்திக்கு 3 கோடி 90 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு..!

ஹாசிப் யாஸீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 3 கோடி 90 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கல்முனைக்குடி காசீம் வீதி காபட் வீதியாகவும், தைக்கா வீதி வடிகான் வசதிகளுடன் கொங்றீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை காரியாலயத்தின் ஏற்பாட்டில் இவ்வீதிகளுக்கான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 04.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு காசீம் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், பிற்பகல் 5.00 மணிக்கு தைக்கா வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வீதிகளுக்கான வேலைகளை அங்குரார்ப்பனம் செய்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார் கௌரவ அதிதியாகவும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.வீ.அலியார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, கல்முனை மொஹிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லா, கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம்.ஜாபீர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -