சீருடை வவுச்சர் தொடர்பில் முறைப்பாடுகளுக்கு 1919 அழைக்கவும்..!

பாடசாலை சீருடை வவுச்சர்கள் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள் காணப்பட்டால் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிடலாம் எனவும், எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை வவுச்சர்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலவச கல்வியை பலப்படுத்துவதற்கும் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் இவ் அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையிலேயே இவ்வாறான சீருடை வவுச்சர் வழங்கி வைக்கும் நடவடிக்கையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அத்துடன் மேலும் கருத்து தெரிவித்த அவர், பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் காணப்படுமாயின் 1919 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிடலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -