அவன்ட்காட் ஒப்பந்தங்கள் இரத்து - ஆயுதங்கள் படையினரிடம் ஒப்படைப்பு

வன்ட் காட் மெரின்டைம் நிறுவனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சகல ஒப்பந்தங்களையும் இரத்துச்செய்து, சகல ஆயுதங்களையும் கடற்படையினருக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் இணைப்புப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், கடற்படைத் தளபதி, ரக்ன லங்கா பிரதிநிதிகள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றனர். 

போலி கணக்கு வழக்கு தொடர்பில் தகவல் வெளியானால், அவை தொடர்பில் விசாரணை நடத்தி, உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -