செய்தியாளர்- ஹாசிப் யாஸீன்-
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நல்லாட்சி அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸூக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் யூ.எல்.எம்.காசீம், செயலாளர் ஏ.மஜீத் உள்ளிட்ட நம்பிக்கையளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா, பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் சாய்ந்தமருதுக்கும், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு செய்த அபிவிருத்தி திட்டங்களையும், உதவிகளையும் நினைவு கூர்ந்ததுடன் பள்ளிவாசல் நிர்வாக சபையினர் பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு விருந்துபசாரம் அளித்து கௌரவித்தனர்.
மேலும் சாய்ந்தமருதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய மகஜர் ஒன்றினை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா கையளித்தார்.



