நுவரெலியா - அட்டன் வீதி கீழிறங்கியுள்ளது - சாரதிகள் அவதானம்

செய்தியாளர்-க.கிஷாந்தன்
நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பாதையின் ஒருப்பகுதி கீழ் இறங்கியுள்ளது.

சுமார் 5 மீற்றர் தூரமான வீதி கீழ்றங்கியுள்ளதால் இரு வழி பாதையான இதில் இந்த பகுதியில் ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்கக் கூடியதாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் வீதி கீழ்றங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும் படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந் வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -