அசின் விராதுவின் இலங்கை வருகை ஆதரித்தவர்கள் ஏன் PJயின் வருகையை எதிர்க்கின்றார்கள்..? (மர்மம்)

மியன்மாரில் முஸ்லிம்களை நெருப்பாலும் துப்பாக்கியாலும் சுட்டுக்கொலை செய்து இன அழிப்பு செய்த அசின் விராதுவின் இலங்கை வருகையையும் அவனோடு கூட்டணி சேர்ந்து பொதுபல சேனா செய்த மாநாடுகளையும் அதனால் ஏற்பட்ட இனப்படுகொலைகளையும் பற்றியும் எச்சரிக்காத மௌலவிமார்களின் சில சபைகள் இலங்கையில் மாற்றுமத சகோதரர்களுக்கிடையில் இஸ்லாம் பற்றிய பிழையான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும் இந்திய அறிஞர் பி ஜே அவர்களின் வருகையை பற்றி எச்சரித்திருப்பது பொடுபோக்கான அறிக்கை என்பதோடு முக்கியத்துவம் இல்லாத விடையங்களுக்கு மட்டும் அறிக்கைவிடும் அவர்களின் வழமையான அறிக்கையாகவே அதை நோக்க முடிகிறது.

முஸ்லிம்களை பிரநித்தித்துவம் செய்வதாக கூறுபவர்களின் தகுதியில் நின்று இக்கரிக்கை நோக்கப்பட எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணர முடிகிறது.முஸ்லிம்களுக்கு நெருக்கடியான கட்டங்கள் ஏற்பட்டபோதெல்லாம் ஒழிந்து மறைந்த அறிக்கைகள் சில தனிநபர்களை இலக்குவைத்து எழுதப்படுவது முஸ்லிம்களின் பணத்தை வைத்து குறித்த சபைகளை துஷ்பிரயோகம் செய்வதாகவே நோக்க முடியும்.

இலங்கையில் முஸ்லிம் மக்களிடம் பொய்யான பிரச்சாரம் மூலம் அரசியல் நடத்தி சொந்த வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் முஸ்லிம் சமூகத்தை நாசகாரம் செய்த அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் இச்ச்சபைகளும் அதன் அறிக்கைவிடும் பொருப்புதாரிகளும் மாற்றப்பட்டு முஸ்லிம்களை சரியான பிரதான குறிக்கோளில் நின்று வழிநடாத்தும் அறிஞர்கள் புத்திஜீவிகள் இச்சபைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.இதன் மூலமே இப்படியான போலி அறிக்கைகள் தேவை இல்லாமல் முஸ்லிம்களை பிரநிதித்துவம் செய்து விடப்படுவதை தடுக்க முடியும்.

முஸ்லிம்களுக்கு எதிரிகளால் ஆயிரம் பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் தரப்புகளை நாசம் செய்ய முயற்சிப்பது வேதனையான வரலாறாகும்.முஸ்லிம்களை பிரநிதித்துவம் செய்யும் சபைகளில் இருந்துகொண்டு அதன் பெயரை நாசம் செய்யும் அறிக்கைகளை இனிமேலும் இவர்கள் கொடுப்பதை ஏற்க முடியாது. 

இதற்காக நடுநிலை ஊடகங்கள் பக்கபலமாக நிற்க வேண்டும் என்று தயவாக வேண்டிக்கொள்கிறேன்.

முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் அசின் விராது போன்றவர்களை எதிர்க்காதவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து சாத்வீக வழியில் சென்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேட்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் தனி நபரை பற்றி அறிக்கை விடுவது இவர்களை ஏதோ ஒரு மறைகரம் இருப்பதாகவே யூகிக்க முடிகிறது. O.C 
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -