அந்த கேவலமான ஊடகம் பிச்சை எடுப்பது நல்லது-பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன்


யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் ஒரு பத்திரிகையை நடாத்துபவர்கள் அதை நடாத்துவதற்குப் பதிலாக தெருவில் நின்று பிச்சை எடுக்கலாம் என வடக்கு மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வட மாகாண சபையின் 37 ஆவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்புத் தொடர்பில் தன்னைக் கருத்துக் கேட்ட குறித்த பத்திரிகை ஊடகவியலாளர் அதன் பின்னர் தன்னிடம் ஒரு அறிக்கையைப் பெற்றுவி்ட்டு அதனைப் பின்னர் மாற்றி செய்தி பிரசுரித்துள்ளார்.

இவ்வாறு கேவலமான வேலைகள் செய்து இவ'வூடகத்தை நடத்துவதை விடுத்து (பிழைப்பு நடாத்துவதற்கு) பதிலாக அவர்கள் தெருவில் நின்று பிச்சை எடுக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -