மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்...!

டந்த அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்துக்கு அமைவாக 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாது விடப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை அடையாளத்தை புதிய அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, இரட்டைப் பிரஜாவுரிமை வேண்டி முன்வைக்கப்பட்டுள்ள 2000 விண்ணப்பப் படிவங்களில், தகுதியானவர்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் வைத்து இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்விவகாரம், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார என்பவற்றுக்கான அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் என்பன இணைந்து இந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -