ஜெயகாந்தன் ப. ஆப்டீன் ஆகியோரை நினைவுக் கூரல் நிகழ்வு..!

அப்துல் ரசாக்-
ங்கள் நினைவுகளில்.. எனும் மகுடத்தின் கீழ் மறைந்த ஜெயகாந்தன் ப. ஆப்டீன் ஆகியோரை நினைவுக் கூரல் நிகழ்வு ஒன்று அனுராதபுரம் நண்பர்கள் இலக்கியக் குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21.11.2015 சனிக்கிழமை அன்று கெகிறாவ ஹோட்டல் சஹன்யாவில் காலை 9.30.மணிக்கு கெக்கிறாவ ஸூலைஹா வின் தலைமையில் நடைபெறும்.

இந்த நிகழ்வின் தொடக்கவுரையை அன்பு ஜவஹர்ஷா நிகழ்த்துவார்.

ஜெயகாந்தன் ப. ஆப்டீன் ஆகியோரைப் பற்றிய நினைவுரைகளை மேமன்கவி; நிகழ்துவார். மேலும் இவ்விழாவில் “ப. ஆப்டீனின் படைப்புலகம்” எனும் தலைப்பில் நாச்சியாதீவு பர்வீன் : “ஆப்டீனை நினைத்து... ” எனும் தலைப்பில் எஸ்.ஏ.ஏ.ஹலீம் ஆகியோர் உரையாற்றுவார்கள்.

“ஜெயகாந்தன்; என்கின்ற ஆளுமை” எனும் தலைப்பில் கிண்ணியா சபறுள்ளாவும் எனும் தலைப்பிலும் கெகிறாவ சஹானா ‘’ஜெயகாந்தனை நினைத்துப் பார்க்கிறேன் ” ஆகியோர் உரையாற்றுவார்கள்.

ஜெயகாந்தனை வாசித்தல் எனும் தலைப்பில் உயர் வகுப்பு மாணவர்கள் கருத்துரைகள் வழங்குவார்கள். இந்த நிகழ்வில் ஜெயகாந்தனின் ‘’யாருக்காக அழுதான்’ திரைப்படத்தை முன்வைத்து கலந்துரையாடல் இடம் பெறும்.

நன்றியுரையை வஸீம் அக்ரம் நிகழ்த்துவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -