எப்.முபாரக்-
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் திருடிய பொருட்களை கொண்டு சென்ற ஒருவருக்கு புதன்கிழமை (4) மாலையில் திருகோணமலை நீதிமன்றம் ஆறு மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தைப் சேர்ந்த 41 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் சந்தேகநபர் திருடிய பொருட்களான டயர், டியூப், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் வெற்றரி சாதனங்கள் போன்றவற்றை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதே உப்புவெளி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கின் சந்தேக நபரை குற்றவாளியாக இணங்கண்டு ஆறு மாதம் கட்டாய சிறை தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா உத்தரவு பிறப்பித்தார்.
