மு.இ.உமர் அலி-
"இலங்கையில் இன்று வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.கவனயீனம்,.போக்குவரத்து விதிகளை மதித்து பேணாமை,சட்டத்தினை மதியாமை,அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள் போன்றனவே இதற்கான காரணமாகும் .இவற்றிலிருந்து இலங்கை மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.போக்குவரத்தி விதிகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.மற்றும் சாரதிகள் உட்பட அனைவரும் ஆரம்ப முதலுதவிகளை அறிந்திருத்தலும் அவசியமாகும். "
வீதிப் போக்குவரத்து விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக ஞாபகரத்த தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று 1 இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே சுகாதார போசாக்கு,சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் பைசால் காசீம் தெரிவித்தார்.

