செய்தியாளர்- எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
பொத்துவில் பிரதேச சபையின் புதிய செயலாளராக லத்திப் முகம்மட் இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள இவர் 14வருடங்கள் கல்வித் திணைக்களத்திலும் 02வருடங்கள் மாநாகர சபையிலும் பிரதம முகாமைத்துவ உதவியாராக கடமை புரிந்துள்ளார்.
2013 நவம்பர் மாதம் முதல் பொத்துவில் பிரதேச சபையில் நிலவி வந்த செயலாளர் பதவிக்கு தற்போத நிரந்தர செயலாளர் வெற்றிடத்திற்கு அதி சிறப்பு முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் கொண்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
