இளைஞர் பாராளு மன்றத்தேர்தலின் அட்டாளைச்சேனையில் முன்னனி வேற்பாளர் யார் இந்த றிபா..?

பர்சான் -
யற்கையிலயே அனைவருடனும் சுமூகமாக பழகக் கூடிய சகோதரர் றிபா அவருடைய ஆரம்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அட்டாளைச்சேனை
கோணாவத்தை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் மிகவும் இலகுவாகவும் அன்பாகவும் எல்லோருடனும் பழகக்கூடியவர்.

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பகல்வியை தொடர்ந்த அவர் தனது உயர் கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் முடித்தார் மிகவும் துடிப்புள்ள இளைஞரான இவர் சிறு பாராயம் முதலே விளையாட்டு சாரணியம் சமூக சேவைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களில் மிகவும் ஆர்வமாக கலந்து கொள்வர்.

அட்டளைச்சேனை தபால் நிலையத்தில் கடமையாற்றி கொண்டிருக்கும் சகோதரர் றிபா அவர்கள் தனது இளம் வயதிலயே விளையாட்டு கலங்கள் மற்றும் பாடசாளைகாலங்களிலும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் வகித்து வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்கதே.

இன்று இளைஞர்களுக்கு நாடளாவிய ரீதியில் இருக்க கூடிய பிரதான பிரச்சினைகளில் ஒன்றுதான் தொழில் வாய்ப்பு ரீதியான பிரச்சினையாகும் அதற்கான சரியான தீர்வு கடந்த காலம் தொட்டு இன்று வரை தீர்வுக்கு கொண்டு வராதது என்பது கவலைக்குறிய விடயமே ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தினால் படித்த இளைஞர்களுக்கென்று கணிசமான வேளை வாய்ப்புக்கள் ஒத்துக்கீடு செய்யப்பட்டாலும் கூட அதனை அரசியல் வாதிகளின் கீழ் ஒதுக்கீடு செய்யும் போது அரசியல் வாதிகளின் அல்லக்கைகளுக்கும் பணத்தினை அள்ளி வீசுபவர்களுக்குமே வாரி வழங்கப்படுகின்றது என்பது சுட்டிக் காட்டப் பட வேண்டிய விடயமே ஆனால் அதில் படித்த இளைஞர்களுக்கு வேளை வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை என்பதே மறைமுகமான உண்மையாகும்.

இதற்கான தீர்வை தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்று அதிகமான இளைஞர்களின் கனவாகவே இருக்கின்றது ஆகவே அதற்கு இவ்வாறான படித்த இளைஞர்கள் களமிறக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் போது இளைஞர்களுடைய கனவுகள் நணவாக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளதை எம்மால் காண முடிகிறது.

அவ்வாறு பார்க்கையில் தனது இளம் வயதிலயே தனது ஊர் தொழில் வாய்ப்பு ரீதியல் பார்க்கும் போது சற்று பின் தங்கிய நிலையில் நின்றாலும் தனது ஊரின் நலனுக்காகவும் தனது சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும் தனது வாழ்க்கையை அரப்பணித்துக் கொண்டிருக்கும் சகோதரர் றிபா அவர்கள் இந்த இளைஞர் பாராளு மன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டால் இளைஞர்களின் உரிமைக்காகவும் தொழில் வாய்ப்புக்களுக்காகவும் குரல் கொடுப்பார் என்பதில் எந்த வீத ஆட்சேபனமுமில்லை.

ஆகவேதான் இது போன்ற நல்லொலுக்கமுல்ல எந்தவீத அரசியல் பக்கச் சார்பற்ற சகோதரர் றிபா அவர்களை தேர்வு செய்து எமது ஊர் இளைஞர்களின் உரிமையை வென்றெடுப்போம் இன்ஷா அல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -