பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து இந்த அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஐதேக, ஐமசுமு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன ஈடுபட்டுள்ளதாக உளவுத் தகவல் ஒன்று கசிந்துள்ளது கடந்த வாரம் 5 ஆம் திகதி தினேஸ் குணவர்த்தன MP தலைமையில் இது தொடர்பான கூட்டம் ஒன்று பத்தரமுல்லவில் நடந்துள்ளது.கூட்டம் பற்றிய தகவல்கள் ரணிலுக்கும் பின்னர் கிடைத்துள்ளது..
விசேடமாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களில் 90 வீதமானவர்கள் பிரதமர் மற்றும் தேசிய அரசாங்கம் மீது விரக்தியில் இருப்பதால் தினேஸ் குணவர்த்தனவின் திட்டம் நிறைவேறும் சாத்தியம் உள்ளதாகவே பார்கின்றோம்..இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் வாசுதேவ நானயகாரவும் சேர்ந்து கொள்கின்றார்.
அதில் ஐதேக முக்கிய தலைவர்கள் சிலர் இருப்பதாக தெரிகிறது .பெயர்கள் வெளியிட முடியாது.மேலதிக செய்திகள் எமது வழமையான உலகதளங்களில் பார்க்கலாம் .. படிக்கலாம்.
ராஜபக்ச ஆட்சியை ஒழித்து ஐதேக அரசாங்கம் அமைத்துள்ள போதும் அதற்கு ஆதரவு அளிக்காத சிலர் இன்று அமைச்சுப் பதவி எடுத்து அவர்களுக்கு ஏற்றது போல் செயற்படுவதால் இந்த விரக்தி நிலைமைக்கு காரணமாக அமைகின்றது.
புதிய கட்சி தொடங்கி இதனை முன்னெடுப்பதைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து இதனை செய்வது சிறந்ததென இவர்கள் கருதுகின்றார்கள்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் அரசாங்கத்தை மாற்றி கூட்டாக தேர்தலை வெற்றிகொள்ள இவர்கள் முயற்சிக்கிறனர்.
விமல் வீரவன்சவின் வழியில் செல்லாமல் இருக்கவும் மஹிந்தவின் உதவியை நாடுவது இவர்களின் திட்டமாகும்
ஆனால் அரசாங்கத்தை கவிழ்த்தால் அடுத்து யாரை பிரதமராக்குவது என்ற குழப்பம் இவர்களைடையே உள்ளது.UNP தரப்பு சஜித்தையும் நீலத்தரப்பு அனுரபிரிய தர்சனயாப்பா & சுசில்பிரேம் ஜெயந்த் பற்றி ஆலோசித்து வருகின்றது.
நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலமாக நடைபெறவுள்ளது.பகிரங்க வாக்கெடுப்பு or ரகசிய வாக்கடுப்பு மூலமாக இதை நாடாளுமன்றத்தில் செய்யலாம்..சீனாவின் அதிக பணம் பட்டுவாடா நடைபெறவுள்ளது… சிலருக்கு அமைச்சு அதிகரிக்கும் இந்த திட்டம் நிறைவேற அதிகவாய்ப்புள்ளது …
மேலதிக தகவல்கள் எமது வழமையான தளங்களில் முந்திக் கொண்டும் ..எனது FB & நியூஸ் பேஜ்ஜில் பிந்திக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.
ஆட்சிக் கவிழ்ப்பு சூடு பிடிக்குமானால் ஹக்கீம் தரப்பு .ரிசாத் தரப்புக்கு செல்வாக்கு பதவி அதிகரிக்கும்.சோரம் அதிகரிக்கும் காரணம் ரணில் அண்ணா தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பல வித்தைகள் காட்டவேண்டும் ..JVPNEWS
