ஐ. ஏ. காதிர் கான்,மினுவாங்கொடை நிருபர்-
கட்சியை விட நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டே தேசிய அரசாங்கம் உருவாக்கப் பட்டது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று மொறட்டுவை மா நகர சபை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் இங்கு கூறியதாவது, “ஒரு கட்சியின் வெற்றி நாட்டின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது. நானோ அல்லது ஜனாதிபதியோ எச் சந்தர்ப்பத்திலும் கட்சியை ஒருபோதும் மறக்கப் போவதில்லை.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நிர்வகிக்கப்படும் உள்ளூராட்சி சபைகளின் அபிவிருத்தியை நோக்கும் போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டின் கீழ் இயங்கும் இவ்வரசின் உள்ளே சகல உறுப்பினர்களும் கெளரவமான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதே போன்று, ஜனாதிபதியும் உள்ளூராட்சி சபைகளை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்றுவதற்கு விரும்புகிறார். எனவேதான், இந்த ஆண்டில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தேவையான உயர்ந்த பட்ச வளங்களைப் பெற்றுத் தர நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
இத் தகவலை தங்கள் ஊடகத்தின் ஊடாக பிரசுரித்துத் தருமாறும், இது தொடர்பில் தங்களால் கிடைக்கும் மேலான ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
அமில பாலசூரிய,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஊடக செயலாளர்.
