நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. 

2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், மொத்தத் தேசிய உற்பத்தியில் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பிழையான புள்ளவிவரங்களைச் சமர்ப்பித்து, மக்களையும் நாட்டையும் ஏமாற்றியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. 

இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக அக்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -