புலிக்கொடியை ஏற்ற அனுமதிக்கக் கூடாது - மஹிந்த

னுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தின் போது, வடக்கில், எவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

தனது அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை நினைவு கூரவோ, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏற்றவோ வடக்கு, கிழக்கிலுள்ள மக்களை அனுமதித்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார். 

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை சில குழுக்கள் ஏற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

தெற்கிலுள்ள சில மக்கள், இந்த வாரத்தின் முக்கியத்துவத்தை மறந்து விட்டதாகவும், முன்னைய காலத்தில் தெற்கைத் தாக்குவதன் மூலம், பிரபாகரன் மாவீரர்களை நினைவு கூறுவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை மக்களை ஏற்ற அனுமதித்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்பாக நாங்கள் மண்டியிடுவதற்கு சமன் எனவும் தெரிவித்தார். 

இதேவேளை, சில முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னணி குழுக்களின் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்ட நிலையிலேயே மாவீரர் வாரம் நினைவு கூரப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -