தனியார் துறைக்கு 2500 ரூபா சம்பள உயர்வு...!

தனியார் துறைக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்காக சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற இருப்பதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு. டி. ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் சட்டமூலமொன்று தயாராவதாக தெரி வித்த அவர் ‘மேன் பவர்’ முறையை ரத்துச்செய்து இந்த முறையின் கீழ் நியமிக்கப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரி வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

தனியார் துறைக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்ட போதும் சில நிறுவனங்களே 1000 ரூபாவினால் சம்பள உயர்வு வழங்கியது. அநேக நிறுவனங்கள் சம்பள உயர்வு வழ ங்க முன்வராத நிலையில் இது தொடர் பில் சட்ட மூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்ட மூலம் தயாரிக்கும் பணி நிறைவடைந் துள்ளதோடு சட்ட மா அதிபர் திணைக் களத்திற்கு அது அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்கள அனுமதி கிடைத்தவுடன் அதனை சாதாரண சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறோம்.

தனியார் துறை சம்பள உயர்வு தொடர்பில் சட்டமூலம் கொண்டு வருவதற்கு சிறு முதலாளிமார் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

புதிய சட்டத்தினூடாக சகல தனியார் துறையினருக்கும் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இது தவிர தனியார் துறை குறைந்த பட்ச சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் சட்ட மூலமும் தயாராகி வருகிறது. சில நிறுவனங்கள் மேன்பவர் முறையின் கீழ் ஊழியர்களை வேலைக்கமர்த்தி வருகின்றன.

தொழில் சட்டத்திற்கமைய இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இது குறித்து பிரதமர் தலைமையில் கூட இருக்கும் பொருளாதார விவகார குழுவில் ஆரா யப்படும். மேன்பவர் முறையை ரத்துச் செய்து அவ்வாறான ஊழியர்களுக்கு நிரந்தர நிய மனம் வழங்கவும் சக ஊழியர்களுக்கிரு க்கும் சலுகைகளை வழங்கவும் உத்தே சித்துள்ளோம்.

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாவாக இதனை அதிகரிக்குமாறு கோரப்பட்டாலும் முதலாளிமார் அதனை மறுத்து வருகின்றனர்.

620 ரூபாவாக உள்ள தோட்டத் தொழிலாளர் சம்பளத்தை 770 ரூபாவாக அதிகரிக்குமாறு நான் பிரேரித்துள்ளேன். இதனால் இரு தரப்பிற்கும் நிவாரணம் கிடைக்கும்.

இருந்தாலும் இன்னும் இழுபறி நிலையே தொடர்கிறது. விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இரு தரப்பும் இணங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -