கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (2015.11.08) அன்று மாலை திருகோணாமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றபோது 2014 ம் ஆண்டு சிறந்த கவிதை நூலிற்கான மாகாண சாஹித்திய விருது அக்கரைப்பற்றை சேர்ந்த ஏ.எம்.அஹமட் சாஜித் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், விவசாய அமைச்சர் ரி. துரைசிங்கம், கல்வி அமைச்சர் கே. தண்டாயுதபாணி, மாகாண கலாசாரப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் உட்பட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.