தன்னை வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்த பொலிஸ் அதிகாரி தன்னை 12 வயதிலிருந்தே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக 19 வயதான யுவதி ஒருவர் பொத்துவில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவருவதாவது,
பொத்துவில் – றொட்டைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான யுவதி கடந்த புதன்கிழமை மாலை திடீர் சுகவீனமுற்ற நிலையில் பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த யுவதியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்திருப்பதை அறிந்து கொண்டு அந்தத் தகவலை பொத்துவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
அதனடிப்படையில் பொலிஸார் யுவதியிடமும் அவரது உறவினர்களிடமும் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் குறித்த யுவதி 12 வயதிலிருந்தே கொழும்பு – தெஹிவளையிலுள்ள பிரதான பொலிஸ் பரிசோதகரான ஒரு பொலிஸ் அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்திருப்பதும் அங்கு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்திருப்பதும் தெரியவந்திருக்கின்றது.
கடைசியாக குறித்த பொலிஸ் அதிகாரி தனது நண்பர்களையும் அழைத்து வந்து இந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வேளையில் அவர் அங்கிருந்து தப்பி வந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்சமயம் குறித்த யுவதி பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிரு க்கின்ற நிலையில் இது குறித்த மேலதிக விசாரணையை தாம் மேற்கொண்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
-வீரகேசரி-
