தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்துமுடிந்துள்ளன. தேர்தலில் பாண்டவர் அணியான விஷால் அணி வெற்றிபெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 3,139 வாக்களிக்க கூடியவர்கள். இதில், 934 தபால் ஓட்டுக்களும், 2,205 பேர் நேரடியாகவும் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்குப்பதிவின் முடிவில் தபால் ஓட்டுக்களையும் சேர்த்து மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில், 1,824 வாக்குகள் நேரடியாகவும், 814 வாக்குகள் தபால் மூலமும் பதிவாகி உள்ளது. தபால் ஓட்டின் படி சரத்குமார் 507 ஓட்டுகளும், நாசர் 301 ஓட்டுகளும் பெற்றிருக்கின்றனர்.13 ஓட்டுகள் செல்லாது என நிராகரிக்கப்பட்டுள்ளன.
தபால் ஓட்டு எண்ணிக்கையின் படி சரத் முன்னிலையில் இருந்தார். SSR கண்ணன் 497 ,விஜயகுமார் 503, சிம்பு 506 கருணாஸ் 303 ,பொன்வண்ணன் 303 ,கார்த்திக் 313,என்ற நிலையில் இருந்தனர்.
அடுத்த கட்ட வாக்குப்பதிவில் சரத்குமார் 1225 ஓட்டுகளும், நாசர் 1334 ஓட்டுகளும் பெற்றிருக்கின்றனர். தலைவர் பதவிக்கான வாக்குகளில் நாசர் வெற்றிப் பெற்றுள்ளார்.மேலும் பொதுச்செயலாளர் போட்டியில் நின்ற ராதாரவி1038 வாக்குகளும், விஷால் 1445 வாக்குகளும் பெற்ற நிலையில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து கார்த்தி 1384 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர். கண்ணன் 1031 வாக்குகளையேப் பெற்றுள்ளார்.


