ஆசிரியர் தினம்.. (முப்பது பிள்ளைகளின் மூக்கணாங் கயிறு இவர்களின் கைகளில்)

முப்பது பிள்ளைகளின்
மூக்கணாங் கயிறு
இவர்களின் கைகளில்.

தங்களின்
வயிறுகளை விட
இந்தக்
கயிறுகளில்
கரிசனை
காட்டுவார்
கற்பிக்கும் ஆசிரியர்.

கீச்சுக் குரலாலே
டீச்சர் படிப்பிச்சதும்
ஆச்சரிய விடயங்களை
ஆசிரியர் சொன்னதும்
இன்னும் காதுக்குள்
இனிமையாய் ஒலிக்கிறது.

படிப்பிக்கும் ஆசிரியரை
கடுப்பாக்கும் முயற்சியாக
கெட்ட பெயரொன்றை
பட்டப் பெயராக்குவது
ஏசு நாதருக்கு முன்னிருந்தே
இருந்து வரும் பழக்கம்.
எனினும்
பட்டப் பெயர் சொன்னவனும்
பட்டமும் பதவியும்
பெற்று வாழனும் என்று
கற்றுத் தந்தவரை
இற்றை வரை மறக்கவில்லை.

ஒவ்வொரு தொழிலிலும்
ஓய்வு பெற்ற பின்னாலே
சாய்வு நாற்காலிதான்
சமூகம் தரும் பரிசு.
இந்த சேவை
இதற்கு விதி விலக்கு.
சென்ற இடமெல்லாம்
சேரென்றும் டீச்சரென்றும்
இனிமையாய் அழைப்பார்
இளைப்பாறிய பின்னாலும்.
தனியான மதிப்பு
தருகின்ற சேவை இது.

பொருளாதார சிக்கலில்
புரள்கின்ற ஆசிரியர்
சரியான இடம் இடமின்றி
சகிப்போடு வாழ்கின்றவர்
இவர்களைத் தேடி
இயன்றதை செய்வதும்
ஆசிரிய தினத்திலே
அவசிய பணிகளாகும்.

காத்தான்குடி நிஷவ்ஸ் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -