e.Ffju;rd;-
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தொடர்சியாக செவ்வாய் கிழமையும் தமக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைப் பணத்தினை வழங்க கோரி ஆலை முகாமைக்கு எதிராக 19 நாட்களாக தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காகித ஆலை வளாகத்தில் ஊழியர்களினல் மேற்கொண்டு வரும் மேற்படி போராட்டத்தினை கைவிடுமாறும் வெகுஜன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் இருக்குமாறு தெரிவித்தும், சம்பள நிலுவைப் பணத்தினை அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்று திறைசேரியின் மூலமாக நிலுவைப் பணத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செவ்வாய் கிழமை மீண்டும் ஒரு தொலை நகல் கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சினால் வாழைச்சேனை ஆலை முகாமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இவ் தொலை நகலில் கூறப்பட்ட விடயத்தினை நன்கு வாசித்து அறிந்த பின்னர் ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்! இவ்வாறான தொலை நகல்கள் நாங்கள் போராட்டத்தினை ஆரம்பித்தவுடன் அடிக்கடி எமது அமைச்சினால் அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான விடயமாகும்.
இதனை நாங்கள் நம்பப் போவது இல்லை. இவ் நிலமை தொடர்ந்து நீடிக்குமானால் எதிர்வரும் காலங்களில் வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தினை நடாத்துவோம் என்றனர்.
கடந்த 2014 ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாத நிலுவை மற்றும் 2015ற்கான ஜீலை, ஓகஸ்ட், செப்ரம்பர் மாத நிலுவைப் பணத்தினை வழங்க எமது அமைச்சர் முன்வர வேண்டும். நாங்கள் இவ்வாலையில் கடமையாற்றிய காலத்தினை கருத்தில் கொண்டு சுயவிருப்பில் வீடு செல்ல நடவடிக்கை எடுத்து தருமாறு கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சினை தாங்கள் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

