அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் அதிகப்படியானோர் சித்தியடைந்து வலயத்தில் சாதனை

எம்.ஏ.றமீஸ்-

ம்முறை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள்அதிகப்படியானோர் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்; முதன் நிலை பெற்று வரலாற்றுச் சாதமைபடைத்துள்ளனர் என அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார்.

இப்பரீட்சையில் தோற்றிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 பேர் புலமைப் பரிசில் பெறத்தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் முகம்மட் றஜாப் பாத்திமா ஹதானி 179 புள்ளிகளைப் பெற்று வலயத்தின்முதன் நிலை பெற்று பாடசாலையின் வரலாற்றுச் சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

தஸ்லிம் பாத்திமா ஹிமா-178 புள்ளிகளையும், அஷ்ரஃப் அனப் அஹமட்-176 புள்ளிகளையும், ஆப்தீன் றுசைக்அஹமட்-174 புள்ளிகளையும், அஹமட் நசீல் முகம்மட் நாமிக் சிமல்-172 புள்ளிகளையும், அப்துல் கபீர் நப்லிஅஹமட்-170 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களான எம்.ஏ.சீ.அஹமட்சுஹைர், ஏ.எல்.ஏ.றஃமான், எம்.ஏ.சலாஹுதீன், எம்.வை.சம்ஹுதீன், ஆர்.எஸ்.எஸ்.றினோல் டெசி ஸ்பக்ஆகியோருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் தமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர்ஏ.எல்.அன்வர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -