பழுலுல்லாஹ் பர்ஹான்-
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனம் மற்றும் சர்வோதய நிறுவனம் இணைந்து நடாத்தும் சமூக மட்ட சிறுவர் விபத்துக்களைக் குறைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அண்மையில் வீதி வபத்தில் பாதிக்கப்பட்ட மயிலம்பாவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஈடு செய்யும் வகையில் ரூபா 10,000 வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் உதயசிறியும், யுனிசெப் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எஸ்.ரவீந்திரனும், சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ.கரீம் மற்றும் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டனர்.

