ந.குகதர்சன்
கிழக்கிலங்கை சர்வதேச பாடசாலையின் விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் இயக்குனர்; திருமதி.தனுஜா மௌலானா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், எடெக்ஸல் கல்வியகத்தின் பிரதானிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலையில் சாதனை பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிதிகளினால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பெற்றோர்களினால் அலிசாகிர் மௌலான மற்றும் திருமதி.தனுஜா மௌலானா ஆகியோருக்கு பாராட்டுதல்கள் வழங்கி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.









