மைத்திரி, மஹிந்தவை இணைக்கச் சென்று சிக்கலில் மாட்டிக்கொண்டேன் - திஸாநாயக்க

ஹிந்த, மைத்திரியை இணைக்க சென்று இறுதியில் தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக சமூக முன்னேற்றம் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

நான் முன்னாள் ஜனாதிபதியிடம் மைத்திரியை தேர்தல் நடவடிக்கையில் செயற்பட இடமளிக்குமாறு கோரினேன். அது கடல் அலை போன்று என்னையே தாக்கி சிக்கலில் தள்ளிவிட்டது.

எனினும் நான் தான் முன்னாள் ஜனாதிபதியையும் தற்போதைய ஜனாதிபதியையும் இணைக்க முயற்சித்தேன். இறுதியில் நான் சிக்கிக்கொண்டேன். நான் ஜனாதிபதியிடம் ஒன்றையும் கோரவில்லை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்து சென்று அமைச்சு பதவிகளையும் வழங்கினார். இவை அனைத்தும் கட்சிக்காக தான், எனினும் இந்த கட்சியில் தீவிரவாதிகள் உள்ளனர்.

அது எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -