ந.குகதர்சன்-
வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் சி.காளிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், வாகரை கோட்டக் கல்விப் பணிப்பானர் எஸ்.பரமேஸ்வரன், அண்மித்த பாடசாலை அதிபர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளால் உயர்தர வகுப்பறையை நாடா வெட்டி திறந்து வைத்ததுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இப்பாடசாலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை சாதாரண தரத்துடன் நிறைவு பெறும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரிவித்து இங்கு உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடும் செய்து தருமாறு கோரியதற்கிணங்க மாகாணப் பணிப்பாளரின் உதவியுடன் தற்போது உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் சி.காளிதாசன் தெரிவித்தார்.






